பிரித்தானியாவில் நடைபெற்ற கோடை விழா: 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு!
பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 18வது கோடை விழா நிகழ்வு பல நெருக்கடிக்கடிகள் மற்றும் பாதுகாப்புக்கள் மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்வில் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருபத்தியோராயிரம் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
300க்கு மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன. சிறப்பாக ஐரோப்பா தழுவிய அணிகள் விளையாட்டுகளில் பங்கெடுத்தன. குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கபடி, கயிறு இழுத்தல், சிறுவர் விளையாட்டுக்கள், பாடும் பந்து என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விளையாட்டுத் திடலில் பல தனியார் வணிக நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. நல்வாய்புச் சீட்டைகளும் குலுக்கப்பட்டன. பரிசுகளாக தங்க நெக்ளஸ், விமானப் பயணச் சிட்டைகள் எனப் பல பரிசுகள் வழங்கப்பட்டன.
உணவுகளாக கொத்து ரொட்டி, கோழிப்புக்கை, அப்பம், கூழ், வடை, ரோல், கேக் என பல வகைச் சுவையைக் கொண்ட சர்பத், குளிபானங்கள், குளிர்களி, சிறுவர்களுக்கான உணவுகள் என பல வகையான உணவுகள் உடனுக்குடன் செய்து சுடச் சுடச் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த விளையாட்டு விழாவில் பல மேடை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வல்வை மக்களைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் கடின உழைப்போடும் கோடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
Post a Comment