அமைச்சரும் பேசினாராம்!



தமிழகத்தில் விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை அழைத்து வர ஜனாதிபதி சம்மதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே ஜனாதிபதியுடனும், வெளிவிவகார அமைச்சருடனும் கலந்துரையாடியிருப்பதாக அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவித்துள்ளார். 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான சாந்தன் தற்போது உடல் நலன் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளார். 

அவர் இலங்கைக்கு திரும்பி வருவதற்கான உதவியை செய்து தருமாறு குடும்பத்தவர்கள் பலரையும் சந்தித்து வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். 

இவ்விடயம் தொடர்பாக இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடமும் , வெளிவிவகார அமைச்சரிடமும் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பேசியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாந்தன் இலங்கைக்கு வருவதற்கான இணக்கத்தை தெரிவித்ததுடன்,  அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணிப்புரை வழங்கியதாக கூறப்படுகின்றது.

 

No comments