ஆசை:ஜேவிபி சரணடைந்தது!
இந்திய அமைதிப்படை இலங்கையில் பிரசன்னமாகியிருந்த காலத்தில் ஆயுத வழி தாக்குதல்களை நடாத்திய ஜேவிபி தற்போது சரணாகதி அடைந்துள்ளது.
புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்து இன்று (05) பேச்சு நடத்தியுள்ளார்.
சந்திப்பு தொடர்பில் கலாநிதி ஜெய்சங்கர்; இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இது ஒரு நல்ல விவாதம். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசப்பட்டது என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவுடனும் நீண்ட காலமாக முரண்பாடுகளை காட்டிவந்திருந்த ஜேவிபி தூதுவரலாயத்திலும் சரணாகதி அடைந்திருந்தது.
இதனிடையே இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வாக்கு வங்கியை பெறவுள்ளதாக பிரச்சாரங்களை ஜேவிபியே முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment