40 வருட போராட்டம் முடிவுக்கு வந்தது: ஆயுதங்களை கீழே போடத்தொங்கியது பி.கே.கே

40 ஆண்டுகால் குர்திஸ்தான் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஜூலை 11, 2025 அன்று ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியாவில் நடந்த ஒரு விழாவின் போது குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த (PKK) போராளிகள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டனர்.  

ஈராக்கிய குர்திஸ்தானில் நேற்று நடைபெற்ற ஆயுதங்களைக் கீழே போடும் விழாவில் பி.கே.கே  போராளிகள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு ஜனாநாயக அரசியலுக்கு மாறினர்.

துருக்கிய அரசுக்கு எதிரான பல தசாப்த கால ஆயுதப் போராட்டத்தை குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை ஈராக்கிய குர்திஸ்தானில் நடந்த ஒரு அடையாள விழாவில் முப்பது பி.கே.கே போராளிகள் தங்கள் ஆயுதங்களை அழித்துக் கொண்டனர்.

பி.கே.கே பலவீனமடைந்த நிலையில், துருக்கியின் அமைதி ஒப்பந்தம், சிறையில் அடைக்கப்பட்ட அதன் நிறுவனர் அப்துல்லா ஒகலனுக்கு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆயுதப் போராட்டத்திலிருந்து விலகுவதற்கான வாய்ப்பை வழங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பழங்கால கேசீன் குகைக்கு வெளியே, ஆண்களும் பெண்களும் கொண்ட 30 பேர் கொண்ட PKK போராளிகள் குழு, காக்கி சீருடையில், முகங்களை மூடாமல், சுமார் 300 பேர் கொண்ட பார்வையாளர்களுக்கு முன்னால் ஒரு மேடையில் ஆயுதங்களைக் கீழே போட்டு எரித்தனர்.

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த மக்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கினர், மற்றவர்கள் அழுவதைக் கேட்க முடிந்தது.

விழாவுக்குப் பிறகு, போராளிகள் மலைகளுக்குத் திரும்பினர் என்று ஒரு PKK தளபதி கூறினார்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் குர்துகளின் விடுதலையை அடைவதே இறுதி இலக்காகக் கொண்டு, 1978 ஆம் ஆண்டு அங்காரா பல்கலைக்கழக மாணவர்களால் PKK உருவாக்கப்பட்டது. அது 1984 இல் ஆயுதம் ஏந்திப் போராடியது. 40 வருடங்கள் கழித்து கடந்த மே மாதம் பி.கே.கே ஆயுதப் போராட்டத்தைக் கலைத்தது. 

1999 முதல் துருக்கிய சிறையில் இருக்கும் அவர்களின் தலைவர் அப்துல்லா ஓகலனின் வரலாற்று அழைப்பிற்கு இணங்க குர்திஷ் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க ஒரு ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரப்போவதாகக் கூறினார்.


இந்த வார தொடக்கத்தில், ஆயுதக் குறைப்பு செயல்முறை "விரைவாக செயல்படுத்தப்படும் என்று ஓகலான் கூறினார்.


சமீபத்திய மாதங்களில், PKK பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது, போர் நிறுத்தத்தில் தொடங்கி மே 12 அன்று அறிவிக்கப்பட்ட அதன் முறையான கலைப்பு வரை இது உச்சத்தை அடைந்தது.


கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த 76 வயதான ஓகலன் பிப்ரவரி மாத இறுதியில் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டது.


No comments