யாழில் போதைப்பொருள் வியாபாரி வீட்டில் அமைச்சர்



கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் Capital ஊடக வலையமைப்பின் தலைவரும் வர்த்தகருமான வின்சேந்திரராஜன் சதாசிவம் (ராஜன்) தனது பிறந்தநாளை யாழ்பாணத்தில் கொண்டாடி இருக்கின்றார் .

சில வாரங்களுக்கு முன்னர் Capital ஊடக வலையமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான இவரின் மகன் குஷ் ரக போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு இருந்தார்

10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இவரது மகன் கைது செய்யப்பட்ட வெறும் சில நாட்களிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் 

வெறும் ஒரு சில கிலோகிராம் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களே நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும்  10 கோடி  பெறுமதியான குஷ் ரக போதை பொருளை கடத்தியவருக்கு  பிணை வழங்கப்பட்டு இருந்தது 

மேற்படி  போதைவஸ்து கடத்தல் தொடர்பாக யாழ்பாணத்திலுள்ள ராஜனின் வீட்டை  பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட முயன்ற போதும் உயர்  அரசியல் அழுத்தங்களால்  பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் அனுமதி  கூட வழங்கவில்லை என சொல்லப்படுகின்றது 

இவ்வாறு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்மொன்றில் நீண்டகாலம் ஈடாட்டம் கொண்ட மேற்படி நபரின் தனிப்பட்ட குடும்ப நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் கலந்து சிறப்பிக்கின்றார் 

போதை பொருள் ஒழிப்புக்காக போராடுவதாக சொல்லும் அரசாங்கத்தின் கொறடாவான கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கு தான் செய்வது தவறு என்று கூட தெரியவில்லை. உண்மையில் பாராளமன்ற உறுப்பினரான அங்கயன் இராமநாதனின் சிறிய தந்தையாரான வர்த்தகர் ராஜன்   

அவர்களுக்கு அங்கயன் இராமநாதனுக்கு மேலதிகமாக தென்னிலங்கை அதிகாரபீடத்திலுள்ள சுசில் பிரேமஜயந்த போன்ற பலர் மத்தியில் உள்ள செல்வாக்கு காரணமாகவே  போதைவழக்கில் சிக்கி இருந்த மகனை மிக விரைவாக பிணையெடுக்கவும் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் பகிரங்கமாக அமைச்சரை அழைத்து பிறந்த நாள் கொண்டாடவும் முடிகின்றது  

No comments