தனித்து அலுவல் பார்க்க ரணிலிடம் வரவேண்டாம்!
கூட்டமைப்பில் ரணில் தரப்பிற்கு தனித்து ஆதரவளித்து அலுவல் பார்த்துக்கொள்ள செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் தரப்பு முற்பட்டுள்ள நிலையில் தமிழரசின் தனித்த அரசியல் கேள்விக்குள்ளாகியுள்ளது.
இரா.சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க என்பவர் தெரிவிததுள்ளார்.
'வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்' - என இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 'ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.
அவர்களின் வியூகம் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லையென தெரிவித்துள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட முகவர்களது பேரல் பேசலை முறியடித்து செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் தரப்பு நேரடியாக ரணில் தரப்புடன் அலுவல்களை பார்த்துவருகின்ற நிலையில் தமிழரசு தர்ம சங்கட நிலையினை எட்டியுள்ளது.

Post a Comment