நீதி அமைச்சரின் ஆமிப்பொங்கல் வாழ்த்துக்கள்!
தைப்பொங்கலினை வடக்கில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதில் படைத்தரப்பு மும்முரமாகவுள்ளது.
ஏற்கனவே பூநகரி உள்ளிட்ட பல நகரங்களில் படைப்பிரிவுகள் பொங்கலை முன்னெடுத்த நிலையில் பலாலி இராணுவ தலைமையம் யாழ்ப்பாணம் - காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா பேரில் இன்று (15) பொங்கலை முன்னெடுத்துள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதாக கூறப்பட்ட போதும் பலாலி இராணுவ தலைமையகமே முன்னெடுத்துள்ளது.
இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெற்றிருந்தது.
அப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாளை பல்லவராயன்கட்டு பகுதியில் வடமாகாணசபை பொங்கல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கு ஆளுநர் தனித்து இன்று பொங்கல் நிகழ்வை முன்னெடுத்திருந்தார்.
இலங்கையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமையை தாம் அறிந்து கொண்டுள்ளதாக பொங்கல் விழாவில் பங்கெடுத்த சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட பிரதம அதிகாரி பீற்றர் ப்ரூர் தெரிவித்துள்ளார்.
கடந்தகால பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாடு இவ்வாறான நிலையை அடைந்துள்ளதாகவும், நிலைமையை மாற்றியமைக்க குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இறுக்கமான கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் பீற்றர் ப்ருர் தெரிவித்தார்.

Post a Comment