வட மாகாணத்தில் 1194?
இலங்கையில் டெங்கு தாக்கம் கட்டுப்படுத்தப்பட முடியாத சூழலில் பரவிவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.வருடத்தின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், பத்து மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அப்பிரதேசங்களில் ஐந்தாயிரத்து இருபத்தி ஒன்பது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் . அத்தொகை ஆயிரத்து எழுநூறு ஆகும்
இதனிடையே வட மாகாணத்தில் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது.
யாழ்.குடாநாட்டில் நல்லூர் மற்றும் யாழ்.பல்கலைக்கழக சூழலில் டெங்கு கட்டுப்பாட்டு போதிய அளவில் முன்னெடுக்கப்படவில்லையென எச்சரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment