நகுலேஸ் பிணையில் !
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் நேற்றைய தினம்(22) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் 25ம் திகதி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பினை மேற்கொண்டதன் பேரில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் நேற்றைய தினம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது இன்னும் இயலாத ஒரு விடயமாகவே இருக்கின்றது. யுத்தத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் இனவாத அரசியலில் இருந்து மற்றைய இனத்தினை அடிமைப்படுத்தும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் கொண்டு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றதென நகுலேஸ் ஊடகங்களிடையே கருத்து வெளியிட்டுள்ளார்.

Post a Comment