பிடிப்பவர்களை விடுவிக்க அழுத்தம்!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த இந்திய அரசு பின்னடித்துவருகின்றது.
அதேவேளை கைது செய்யப்படுகின்ற இந்திய மீனவர்களை விடுவித்துவிடுமாறு ராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இன்று (23) இரண்டு விசை படகுகளுடன் 6 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடற்படையினரால் கைதான 40 மீனவர்களை இந்தியாவின் அழுத்தத்தால் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதனிடையே வங்காள விரிகுடாவின் குறுக்கே இந்தியாவில் உள்ள தனுஸ்கோடி மற்றும் இலங்கையை இணைக்கும் கடல் பாலத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ளது. முக்கியமாக பாதுகாப்பு ரீதியாக இந்தியா - இலங்கை இடையிலான உறவை புதுப்பிக்கவும், சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை எதிர்க்கவும் திட்டம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment