லொஹான் ரத்வத்த மீண்டும் அமைச்சரானார்!
இன்று காலை லொஹான் ரத்வத்த பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று மேற்படி ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஹெலிகாப்டரில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மது போதையில் அத்துமீறி சென்று , பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதிகளை தன் முன் மண்டியிட செய்து அவர்கள் தலையில் துப்பாக்கிகளை வைத்து கொ**லை அச்சுறுத்தல் விடுத்தது இருந்தார்
மேற்படி விவகாரம் சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த அமைச்சரவையின் வழிகாட்டுதலின் கீழ்,நீதி அமைச்சராகவிருந்த அலி சப்ரி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன அவர்களை நியமித்தார்.
நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன அவர்கள் , தனது தனி நபர் விசாரணை அறிக்கையில்,பல குற்றச்சாட்டுகளின் கீழ் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து இருந்தார்
குறிப்பாக லொஹான் ரத்வத்தே செய்ததாகக் கூறப்படும் பல குற்றங்கள் குறித்து, நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக அவர் அறிக்கையிட்டு இருந்தார்
அதாவது சிறைச்சாலையில் ஆயுதம் பயன்படுத்துதல் (Prisons Ordinance), குற்றமொன்றுக்காக ஆயுதம் பயன்படுத்துதல் (Firearms Ordinance), அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சித்தல், அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துதல், கொ**லை முயற்சி, மிரட்டல் விடுத்து குற்றமிழைத்தல் போன்ற பல்வேறு தண்டனைக்குரிய பிரிவுகளில் குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி இருந்தார்
ஆனால் இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 869 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் லொஹான் ரத்வத்தே மீது எந்த காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இது போதாதென்று ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் லொஹான் ரத்வத்தவை அமைச்சராக்கி அழகு பார்க்கின்றார்
இந்த தண்டிக்க வேண்டிய கிரிமினல் குற்றவாளியான லொஹான் ரத்வத்தயின் கல்வி தகுதி வெறும் 'Diploma in management' ஆகும்
இந்த மூன்றாம் தர கிரிமினல்கள் தான் இலங்கை தீவை 2048 ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த தேசமாக உருவாக்க போகின்றார்கள்
Post a Comment