கடல் நீரேரியிலிருந்து சடலம் !
தொண்டமானாறு - காற்றாடிச் சந்தியை அண்மித்த கடல் நீரேரியிலிருந்து இன்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீச்சு வலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் நீரேரியில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அவசர தொலைபேசிக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் சடலத்தை மீட்டு ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிகிறது.
Post a Comment