லொகான்:குடும்பத்திற்கும் நெருங்கியவர்!



சந்திரிகா குமாரதுங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்திருந்த ரத்வத்தையின் மகனும்  முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த இன்று உயிரிழந்துள்ளார்.இதனிடையே உயிரிழந்த லொகான் ரத்வத்தவிற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அனுர அரசின் கைது பட்டியில் பெயருள்ள நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த லொகான் ரத்வத்த இன்று மரணித்திருந்தார்.

அவரது மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த, “லொகான் ரத்வத்தேவின் மறைவு நாடுக்கும், குறிப்பாக கண்டி மாவட்டத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும்” என்று தெரிவித்திருந்தார்.

நாமல் ராஜபக்ச, “அவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு சகோதரர் போன்று, எங்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய அரசியல்வாதியாக பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.

கண்டியில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை படுகொலை செய்தமை மற்றும் மதுபோதையில் அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளிற்கு துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்தமையென பல குற்றச்சாட்டுக்கள் லொகான ரத்வத்த மீது முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments