தப்பித்து ஓடாதிருக்க தடை?





செம்மணி மனித புதைகுழி வழக்கில் இருந்து இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரை அகற்றுமாறு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பான விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்றிருந்தது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓர் அறிக்கையையும் யாழ். பல்கலைக்கழக சட்ட வைத்திய அதிகாரியும் ஓர் அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்கள். 

அதில்  சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையிலே ஸ்கானர் பாவிக்கப்பட்டதற்கு பிறகு இன்னமும் குறைந்தது எட்டு வாரகாலத்திற்கு மேலதிக அகழ்வுகள் செய்ய வேண்டிய தேவை இருப்பதாக அறிவித்திருக்கிறார். 

செம்மணி புதைகுழிகளிற்கு பொறுப்பாக இருந்திருக்க கூடியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் கூடுதலாக இருக்கிறது.அத்தகைய சூழல் சம்பந்தமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டிருக்கிறதென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே எதிர்வரும் 20 ஆம் திகதிஇடம் மீள் சுத்தப்படுத்தபடுவதாகவும் அதற்குப் பின்னர் 22 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் நீதவான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments