பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மஜீத் படைப்பிரிவை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் (FTO) என அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த மார்ச் மாதம் 31 பேர் கொல்லப்பட்ட தொடருந்துக் கடத்தல் உட்பட பலுசிஸ்தானில் நடந்த கொடிய தாக்குதல்களுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இன்றைய வெளியுறவுத்துறையின் நடவடிக்கை, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் டிரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Post a Comment