பாரிசை முற்றுகையிட்ட விவசாயிகள்


பிரான்ஸ் முழுவதும் விவசாயிகள் உழவூர்திகள் மற்றும் பாரவூர்திகளைப் பயன்படுத்திச் சாலைகளைத் தடுத்து போக்குவரத்தை முடக்கினர்.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் பாரிஸுக்குச் செல்லும் எட்டு நெடுஞ்சாலைகள் விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டு தடுக்கப்பட்டன.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 15,000 காவல்துறையினரையும், துணை இராணுவப் படையினரையும் அணிதிரட்டியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரில் புதிய உணவு சந்தை மற்றும் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த விவசாயிகள் பிரான்ஸ் தலைநகரை நோக்கிச் செல்வதாக அச்சுறுத்தும் நிலையில் இன்று ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாரிஸில் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்னர்.

இப்போராட்டத்திற்குப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து முக்கிய விவசாய சங்கங்கள் பிரஞ்சுப் பிரதமர் கேப்ரியல் அட்டலைச் சந்தித்தனர்.

லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள மோனாலிசா ஓவியத்தைப் பாதுகாக்கும் கண்ணாடி மீது காலநிலை ஆர்வலர்கள் சூப் வீசினர்.

பிரெஞ்சு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த ஊதியம், குறைவான சுற்றுச்சூழல் சிவப்பு நாடா மற்றும் மலிவான இறக்குமதியிலிருந்து பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

No comments