சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் ஈரோஸ்டார் தொடருந்து சேவைகள் இரத்து


சர்வதேச தொடருந்தை இயக்கும் யூரோஸ்டார் இங்கிலாந்து தெற்கில் உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் லண்டனுக்கு வரவிருந்து 14 தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் ஐரோப்பாவிற்குள் செல்ல முடியாமல் தவித்தனர். இரத்து செய்யப்பட்ட தொடருந்துகள் லண்டன், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் இடையே பயணிக்கவிருந்தன.

கென்ட்டில் உள்ள Ebbsfleet இன்டர்நேஷனல் நிலையத்திற்கு அருகிலுள்ள சுரங்கப்பாதைகளில் வெள்ளம் புகுந்தது. பிரெஞ்சு அரசுக்கு சொந்தமான SNCF வோயேஜர்ஸ் நிறுவனத்திற்கு 55.75% சொந்தமானது யூரோஸ்டார். யூரோஸ்டார் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது.

லண்டனுக்கு அருகிலுள்ள அதிவேகப் பாதையில் உள்ள உள்கட்டமைப்பு பிரச்சனை காரணமாக, டிசம்பர் 30 இன்ற சனிக்கிழமையன்று லண்டனுக்குச் செல்லும் வழியில் சில தொடருந்துகளை இரத்து செய்ய உள்ளோம் என்று சேவை வழங்குநர் தனது இணையதளத்தில் தெரிவித்தார்.

No comments