ஈபிடிபி ஆதராளர் சிவில் சமூக பிரதிநிதியாம்?





அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு தனது ஆதரவாளர்களை பொது அமைப்பு பிரதிநிதிகள் பெயரில் அழைத்துவந்து கட்டைப்பஞ்சாயத்துக்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளது.

இந்நிலையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை தாக்க முற்பட்ட ஒருவரை சிவில் சமூக பிரதிநிதியென டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்திருந்தார்.

ஆனாலும் பின்னராக நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அமைச்சரால் சிவில் சமூக பிரதிநிதியென அடையாளப்படுத்தப்பட்ட நபர் பங்கெடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் தமது பாதுகாப்பு கருதி எதிர்வருங்காலங்களில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் பங்கெடுப்பது பற்றி ஆராயவேண்டுமென ஏனைய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 


No comments