நேர்முக தேர்வுக்க சென்றவர்கள் விபத்துக்குள்ளானார்கள்: 11 பேர் காயம்!!


ஹொரவப்பொத்தான- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் சிற்றூர்த்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (10) காலை   இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

சிற்றூர்தி வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவப்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஓட்டுநரின் அசமந்தத்தினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை ஹொரவப்பொத்தான காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments