காசாவையும் இலங்கையையும் வெவேறு கோணத்தில் பார்ப்பது தவறு


காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

எனவே தூய்மையான கரங்களுடன் வந்தால் அடுத்த செப்டெம்பர் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பதிலளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிமடை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நேற்று திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனத்திற்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேற்குலக நாடுகள் இலங்கை மற்றும் காசா தொடர்பில் பின்பற்றும் நியதிகளின் வேறுபாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, தூய்மையான கரங்களுடன் உலகளாவிய தேவைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments