அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் 15 பேர் பலி!!
காசா நகரின் மிகப்பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கமான செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காஸாவிலிருந்து காயமடைந்தோரை ராஃபா எல்லை நோக்கி அழைத்துச்சென்றபோது இஸ்ரேலியப் படைகள் அவசர மருத்துவ உதவி வாகனங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடப்பட்டுள்ளது.
ஹமாஸ் செயற்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸை தாக்கியதை இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
பல ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸ் போராளிகள் மற்றும் ஆயுதங்களை ஆம்புலன்ஸ்களில் மாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை இன்னும் வழங்கவில்லை.
முன்னதாக, அல்-ஷிஃபாவுக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் கூறியது.
மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் பலர் காயமடைந்ததையும் காணொளிகள் காட்டின.
Post a Comment