ஐ.நா பள்ளி மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 15 பொதுமக்கள் பலி!!


ஐ.நாவின் கீழ் இயக்கப்படும் ஜபாலியா அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் அளித்து வந்த அல்-ஃபகூரா பள்ளியின் மீது  இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 54 பேர் காயமடைந்ததாகவும் கூறுகிறார்.

பலியானவர்களில் பெரும்பாலோர் பள்ளிக்கூடத்தில் அமர்ந்திருந்த பெண்களும் குழந்தைகளும் துண்டு துண்டாக இறந்து காணப்பட்டனர். அவர்களின் எலும்புகள் மற்றும் சதைகள் பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கப்பட்டன காசாவின் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 231 பேர் கொல்லப்பட்டதாக அல்-குத்ரா  கூறினார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்  3,900 குழந்தைகள் உட்பட 9,488 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments