பாகிஸ்தான் விமானப் படைத் தளம் மீது தாக்குதல்: பற்றி எரியும் 3 விமானங்கள்!!
மத்திய பாக்கிஸ்தானின் மியான்வாலி பகுதியில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்தில் இன்று காலை ஊடுருவிய பயங்கரவாத்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலையடுத்து விழித்துக்கொண்ட இராணுவத்தினர் பயங்கரவாத்திகள் மீது முறியடிப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் பிடிபட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டது.
பயங்கரவாதிகளின் தாக்குதலில், விமான படை பயிற்சி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 விமானங்கள் மற்றும் எரிபொருள் டாங்கரும் சேதடைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் முழுமையான தேடுதல் வேட்டைக்கு உள்ளாகியது.
பாகிஸ்தானில் இயங்கிவரும் தெஹ்ரீக்-இ-ஜிஹாத் (டிஜேபி) எனப்படும் பங்கரவாதக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களக்கு அனுப்பிய அறிக்கையில் சனிக்கிழமை காலை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து 14 வீரர்கள் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment