பல்கலையும் சளைக்கவில்லை!
தமிழர் வாழும் தேசங்களில் இன்று (27) மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகமும் சளைக்காது தனது கடமைகளை ஆற்றியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு 19வருடங்களின் பின்னராக நுழைவாயிலில் வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்று வந்திருந்தது.
அவ்வகையில் 2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக பிரதான வாயிலில் மாவீரர் நாள் வளைவு அமைக்கப்படடுள்ளது..
அதேவேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுற்றுவட்டப் பாதையில் மாவீரர் நாள் பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில்" மாவீரர் நாள் என பதாகை கட்டப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடியுடன் சில பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
“எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது.... ஆகவே விழித்தெழு இளம் தலைமுறையே .. போதை வஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து” என பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தூதுவரலாயங்கள் படையெடுத்து தேசிய உணர்வை சிதைக்க முற்பட்டுள்ள போதும் அதனை தாண்டி மாவீரர்களது தியாகங்கள் தேசத்தை வழிநடத்துமென இன்றைய மாவீரர் தின நினைவேந்தல்கள் தாயகத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
Post a Comment