கோட்டா, மஹிந்த, பசிலின் பிரஜாவுரிமை பறிப்பு!



நாட்டை வங்குரோத்தாக்கிய ஆட்சியாளர்களிடம் இருந்து இழப்பீட்டை பெறுமாறும் கோட்டா, மஹிந்த, பசிலின் பிரஜாவுரிமையை பறிக்க கோரியும் கையெழுத்து வேட்டை இன்று (23) காலை கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,நாட்டை வங்குரோத்தாக்கிய ஆட்சியாளர்களிடம் இழப்பீட்டை பெறவேண்டும்.மேலும் இவார்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட வேண்டும். அதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. ஆணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்றார். 

No comments