இந்திய நிதி அமைச்சர் பிணை மீட்ட மீனவர்கள்இலங்கை கடற்படையினரால் கைதான இந்திய மீனவர்கள் இந்திய நிதி அமைச்சரது பயணத்தின் போது  மிரட்டலின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண கடற்படையினரால் மாத்திரம் முடியாது தென்னிந்திய அரசியல்வாதிகளுடன் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அதற்காக இனம், பிரதேசம் மற்றும் கட்சி என்ற பேதமின்றி அந்தந்த பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
No comments