ரணில் புதிய கூட்டு:கூட்டமைப்பும் ஜக்கியம்!ரணில் தனது ஜனாதிபதி கதிரையினை உறுதிப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக குதித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக இடம்பெற்ற  அரசியல் கூட்டம்த்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பங்கெடுத்துள்ளனர்.

தற்போது புதிய கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் அரசியல் சக்தியை உருவாக்குவது தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான கூட்டமாக இது இடம்பெற்றுள்ளது.

இது மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டுள்ளதுடன், அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூட இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை .

இதற்காக, புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உருவாகும் புதிய அரசியல் சக்தி தொடர்பான பல இறுதி முடிவுகளை எடுக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் ஜனவரியில் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவது என்ற முடிவும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதையும் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்றும் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


No comments