இந்தியாவின் காலில் வீழ்ந்த ஜேவிபி!



 ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக கனவிலிருக்கின்ற ஜேவிபி தனது எதிரிகள் என சொல்லி வந்த அமெரிக்காவை தொடந்து இந்தியாவின் காலிலும் வீழ முன்வந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் எமது நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாட தனக்கு வாய்ப்பு கிடைத்தது” என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் எல்டோஸ் மேத்யூ, மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments