துருக்கி தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்!!


துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்துறை அமைச்சகக் கட்டிடத்தின் முன் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணியளவில் தற்கொலைதாரி தன்னைத் தானே வெடிக்க வைத்ததில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர்.

மற்றொரு தாக்குதலாளி காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

இப்பகுதியில் துருக்கியின் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்த புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுனமன்றில் ஜனாதிபதி எர்டோகன் தொடக்க உரையை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments