தடை செய்யப்பட்ட 140 கிலோ மீன் பிடி வலைகளுடன் யாழில் ஒருவர் கைது


யாழ்ப்பாணத்தில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்.நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்தே  தடை செய்யப்பட்ட 140 கிலோ எடையுள்ள வலை மீட்கப்பட்டது. 

வலை மீட்கப்பட்டதை அடுத்து, தடை செய்யப்பட்ட வலைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் , மீட்கப்பட்ட வலைகளையும் , கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments