வீட்டில் மயங்கி விழுந்த வல்வெட்டித்துறை கிராம சேவையாளர் உயிரிழப்பு


வீட்டில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து உறவினர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

No comments