திலீபன் ஊர்தி மீதும் கஜேந்திரன் எம்பி மீதும் காடையர்கள் தாக்குதல்!!


 

தியாக தீபன் திலீபனின் ஊர்தி பவனி மீது கடைய கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
>
அம்பாறை பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நல்லூரை நோக்கி தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி பயணித்துக்கொண்டிருக்கிறது. 

அதன் போது பலரும் தியாக தீபத்திற்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் திருகோணமலை கப்பல்துறை பகுதியை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்தி பவனி வந்தடைந்த போது , அங்கு இலங்கையின் தேசிய கொடியுடன் வந்த காடையர்கள் ஊர்தி பவனி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்தரன் உட்பட தமிழத் தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு , தியாக தீபத்தின் உருவ படத்தினையும் தாக்கி சேதப்படுத்தினர் . 

குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெறும் போது பொலிஸார் அப்பகுதியில் நின்றிருந்த போதிலும் , தாக்குதலாளிகளை கைது செய்யவோ , தாக்குதலை தடுக்க முற்படாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 


No comments