பருத்தித்துறை கடலில் விழுந்து கடற்தொழிலாளர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நீண்ட நாள் மீன் பிடிக்கு கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

திருகோணமலையை சேர்ந்த நிமல் கருணாரத்ன (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். 

தென்பகுதியை சேர்ந்த பலநாள் மீன் பிடி படகுகள் , பருத்தித்துறை துறைமுகத்தில் ஓய்வெடுத்து செல்வது வழமையாகும். அவ்வாறு நேற்றைய தினம்  சனிக்கிழமை ஓய்வின் பின்னர் மீண்டும் ஆழ் கடல் நோக்கி சென்ற படகில் இருந்த கடற்தொழிலாளர் ஒருவர் தவறி கடலில் விழுந்துள்ளார். 

கடலில் விழுந்தவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு , கரைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments