இணையவழி தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்


அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தின் பணிப்புரைக்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒகஸ்ட் 26ஆம் திகதி நடத்தப்பட்ட இணையவழி தாக்குதலால், அமைச்சரவை அலுவலகம் உட்பட பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments