பிரேசிலில் விமான விபத்து-14 பேர் உயிரிழப்பு


பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  விபத்தானது நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த விமானத்தில் 12 சுற்றுலாப் பயணிகளும், ஒரு விமானி மற்றும் துணை விமானியும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பொழுதுபோக்கிற்காக மீன்பிடிப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments