மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவி உயிரிழப்பு


தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவி மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவி உயிரிழந்துள்ளார். 

தலவாக்கலை வீதியில் பூண்டுலோயா பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில், பம்பரகலை பகுதியை சேர்ந்த விஜயராஜ் திவ்யராணி (வயது 17) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மரக்கிளை முறிந்து இவர்கள் மீது விழுந்துள்ளது. 

அதில் தந்தையும் மகளும் காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்துள்ளார். 

No comments