அதிகம் சூடாகிறது ஐபோன் 15 மற்றும் ப்ரோ மேக்ஸ் தொடுதிரைபேசிகள்


அண்மையில் வெளியான ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அதிகம் வெப்பம் அடைவதாக அதனை வாங்கிய பயன்பாட்டாளர்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

ஃபிளாக்ஷிப் ஆப்பிள் போன்கள் 47C வரை அதிக வெப்பநிலையை எட்டுவதாகக் கூறப்படுகிறது.

ஐபோன் தொடுதிரை பேசிகளை தொடும் போது மிகவும் சூடாகக் காணப்படுகின்றது சில பயன்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை வேகமாக சார்ஜ் செய்யும் போது அது மிகவும் சூடாகக் காணப்படுகிறது நிருபர் இயன் ஜெல்போ எக்ஸ் தளதில் பதிவிட்டுள்ளார். மக்கள் மிகைப்படுத்துகிறார்கள் என்று நான் நினைத்தேன் ஆனால் அது உண்மை தான் என்று குறிப்பிட்டார்.

25 சதவீத பேட்டரி அளவிலிருந்து 60 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்யும் போது, ​​சிக்கல் மிக மோசமாக இருந்தது என்று திரு. ஜெல்போ குறிப்பிட்டார்.

70 சதவிகித பேட்டரி சதவிகிதம் சார்ஜ் செய்து வரும்போது ஐபோன் கணிசமான வெப்பம் குறைந்துவிட்டது என்றும் கையில் எடுக்கக்கூடியதாக இருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதே போன்று பலர் முறைப்பாடுகளை தொிவித்துள்ளனர். அத்துடன் அப்பிள் நிறுவனத்திற்கும் நேரடியாக முறைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய சட்ட விதிகளின் படி ஐபோன் 15 முதன் முறையாக அதன் தனியுரிம சார்ஜிங் கேபிள்களில் இருந்து தரப்படுத்தப்பட்ட USB-C சார்ஜருக்கு மாறியது.

ஐபோன் 15 பயன்பாட்டாளர்கள் கேம்களை விளையாடும்போது அல்லது பயன்பாடுகள் மூலம் ஸ்க்ரோலிங் செய்யும் போது அதிக வெப்பத்தை அனுபவித்ததாகக் அப்பிள் நிறுவனத்தினர் கூறினர்.

No comments