பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 52 பேர் பலி


பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், முகமது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மக்கள் கூடியிருந்தபோது இன்று வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

பலுசிஸ்தானில் அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெஷாவர் நகருக்கு அருகில் உள்ள ஹங்குவில் அமைந்திருக்கும் மசூதியில் இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

பெஷாவர் அருகே ஹங்குவில் உள்ள மசூதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என முதல்கட்டச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஹாங்குவில் உள்ள மசூதி 40 முதல் 50 பேர் வரை இருந்திருக்காலம் எனக் கருதப்படுகிறது. இது ஒரு காவல்துறை வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்று உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலுசிஸ்தான் நகரமான மஸ்துங்கில் உள்ள காட்சிகள், அவசர உதவியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். மேலும் தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் தலிபான் மற்றும் இஸ்லாமிய அரசு குழு உள்ளிட்ட ஆயுதமேந்திய போராளிகளால் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் மாநிலமாகும். 

எவ்வாறாயினும், TTP வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பில் தொடர்பு இல்லை என மறுத்துள்ளது. அத்தகைய தாக்குதல் அதன் கொள்கைகளுக்கு எதிரானது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், இதே மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு முக்கிய முஸ்லிம் தலைவர் உட்பட குறைந்தது பதினொரு பேர் காயமடைந்தனர்.

ஜூலை மாதம், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மதவாத அரசியல் கட்சி ஒன்று கூடும் இடத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments