யேர்மனியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36 ஆண்டு நினைவு நாள் யேர்மன் தலைநகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக

உணர்வுபூர்வமாக நடைபெற்றது. யேர்மன் நாட்டின் பல நகரங்களிலும் இருந்து வருகை தந்த தமிழ் மக்களின் தேசஉணர்வுடன் மூத்த தளபதி கேணல் சங்கர் அண்ணாவின் நினைவுடனும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

36 ஆண்டுகள் கடந்து சென்றாலும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் அதி உச்ச அர்ப்பணிப்பை எண்ணி நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கண்ணீர் விட்டு மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

சிங்கள பேரினவாத அரசின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஊர்திப்பயணத்தை தாக்கி திலீபன் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு தடியால் அடித்து சேதப்படுத்தினார்களோ , அதே தியாக தீபத்தின் 5 மீற்றர் திருவுருவப்படம் வானுயர யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக காட்சி அளித்தது நிகழ்வில் கலந்துகொண்ட மக்களின் மனதில் விடுதலை உணர்வலைகளை ஏற்படுத்தியது.

வணக்க நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழ் இளையோர் அமைப்பின் உரையும், வேற்றின பேச்சாளர்களின் உரைகளும் இடம்பெற்றன. சமநேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் கோசங்கள் இளையோர்களால் எழுப்பப்பட்டு , யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

இறுதியில் வெளிவிவகார அமைச்சுக்கான மனு வாசிக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம்… ” நம்பிக்கை பாடலுடன் நிகழ்வு நிறைவுற்றது.

No comments