புர்கினா பாசோவில் இராணுவ ஆட்சிக்கு எதிரான சதி முயற்சி முறியடிப்பு


புர்கினா பாசோவின் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான சதி முயற்சி அந்நாட்டின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவைகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புர்கினா பாசோவின் இராணுவ ஆட்சியாளர்கள் இன்று புதன்கிழமை ஒரு அறிக்கையில் இதனைத் தெரிவித்தனர். 

இராணுவ அதிகாரிகளும் மற்றவர்களும் அதிகாரத்தைக் கைப்பற்றி நாட்டை குழப்பத்தில் ஆழ்த்த திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார்.

நேற்று செவ்வாக்கிழமை இந்த சதி முயற்சியில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் செயற்பாட்டிலர் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பி ஓடிய இருவரும் தேடப்பட்டு வருகின்றார்கள் ன்று ஆளும் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரிம்டால்பா ஜீன் இம்மானுவேல் ஓயுட்ரோகோ கூறியுள்ளார்.

இந்த சதியில் தொடர்பான அனைத்து விடயங்களையும் தற்போதை இராணுவ அரசாங்கம் உண்மைகளை வெளிப்படுத்தும் என்று கூறிப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு எதிரான சதி பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்" விசாரணை திறக்கப்பட்டுள்ளது, என்று வழக்கறிஞர் கூறினார்.

No comments