கோபால் பாக்லே போகிறார்!இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பானது இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக மன்பிரீத் வோஹ்ரா இற்கு பிறகு இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே  நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்பிரீத் வோஹ்ரா அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் இந்தியா திரும்ப உள்ளதுடன், அதன் பின்னர் கோபால் பக்லே உத்தியோகப்பூர்வமாக இலங்கையில் இருந்து தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோபால் பாக்லே இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்,பல நாடுகளின் இணைச் செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

கோபால் பாக்லே 2020ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உத்தியோகப்பூர்வமாக தமது பணியை ஆரம்பித்துள்ளார். 

கோபால் பாக்லே 2020ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உத்தியோகப்பூர்வமாக தமது பணியை ஆரம்பித்திருந்தார்.


No comments