பூநகரியில் பண்பாட்டு விழா!வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பூநகரி பண்பாட்டுப் பேரவையும் பூநகரி பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் பிரதேச பண்பாட்டு பெருவிழா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு முட்கொம்பன் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் த.அகிலன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனும் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சனும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருவாட்டி நி.லாகினி மற்றும் முட்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் ப.ஜோயல் பியசீலனும் கலந்துகொள்ளவுள்ளனர்.


No comments