பிள்ளையானிற்கு கண்டம்!ஈஸ்டர் குண்டுவெடிப்பின்  சூத்திரதாரியாக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில், 1990ம் ஆண்டு அகதிகளாக தஞ்சமடைந்திருந்தவர்களில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 176பேரின் நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்படடுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச நீதிப்பொறிமுறையின கீழ் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1990 ஆண்டு நடுப்பகுதியில் போர் ஊக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக,கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

அதன்போது படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இதனிடையே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பில் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


No comments