தொடரும் 4 ஆம் நாள் போராட்டம்: பெல்ஜியத்தை வந்தடைந்தது!

தமிழின அழிப்புக்கு  அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்று நீதி கேட்டு 31.08.2023 அன்று பிரித்தானியாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருறுளிக்

கவனயீர்ப்புப் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்ந்தது.

நெதர்லாந்தில் உள்ள பிறேடா மாநகரசபை முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட ஈருறுளிக் கவனயீர்ப்புப் போராட்ம் நெதர்லாந்து ஊடாக பெல்ஜியம் நாட்டில் அமைந்து மாவீரர் நினைவிடத்தை சென்றடைந்தது.

இப்போராட்டமானது பிரான்ஸ், ஜேர்மனி ஊடாக ஜெனீவா சென்றடையவுள்ளது.

No comments