இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்ட தாய்க் கரடி


இந்த வாரம் ஆரம்பத்தில் இத்தாலியின் சான் செபாஸ்டியானோ டெய் மார்சி நகரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கரடி இரண்டு குட்டிகளுடன் சுற்றித் திரிவது காணொளி எடுக்கப்பட்டு வைரலாக்கப்பட்டது.

அமரேனா என்ற பெண் கரடியை பயத்தின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒருவர் கூறியுள்ளார்.

எந்த கரடியும் குடியிருப்பாளர்களை எந்த ஆபத்தும் கொண்டு வரவில்லை என உள்ளூர் ஆளுநர் மார்கோ மார்சிலியோ கூறினார்.

இந்தக் கரடியின் இரு குட்டிகளையும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கில்பெர்டோ பிச்செட்டோ தொிவித்தார்.

மத்திய இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட அப்ரூஸ்ஸோ தேசிய பூங்காவில் வாழும் சுமார் 60 ஆபத்தான மார்சிகன் கரடிகளில் அமரேனாவும் ஒன்றாகும் எனக் கூறப்படுகிறது.

No comments