சகோதரியின் கணவன் உள்ளிட்டவர்களால் தாக்கப்பட்ட கொடிகாம இளைஞன் உயிரிழப்பு


கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன்  உயிரிழந்துள்ளார். 

கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தவரின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட கும்பல் ஒன்று தனிப்பட்ட பகை காரணமாக தாக்குதல் மேற்கொண்டதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் நேற்றைய சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பளை பொலிஸார் , 34மற்றும் 31 வயதுடைய இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments