1,450 கத்தோலிக்கர்கள் வாழும் மொங்கோலிய நாட்டில் போப் பிரான்சிஸ்


1,450 கத்தோலிக்கர்கள் மட்டுமே உள்ள மொங்கோலியா நாட்டுக்கு போப் பாண்டவர் பயணம் செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மொங்கோலியாவின் தலைநகரான உலன்பாதரில் நடந்த ஒரு பொதுமக்கள் திருப்பலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

எல்லை நாடான சீனாவில் உள்ள கத்தோலிக்கர்கள் நல்ல கிறிஸ்தவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

சுமார் இரண்டு டஜன் சீன கத்தோலிக்கர்கள் போப்பின் வாகன அணிவகுப்பைச் சூழ்ந்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற இன்று திங்கட்கிழமை முயன்றனர்.

புத்தமதத்தைக் கொண்ட மொங்கோலியாவில் 3.3 மில்லியன் மக்கள்தொகையில் 1,450 கத்தோலிக்கர்கள் மட்டுமே உள்ளனர்

70 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்காத வத்திக்கானுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள், 2018 இல் இந்த பிரச்சினையில் ஒரு உடன்பாடு இருந்தபோதிலும் சீனாவின் கத்தோலிக்கர்களின் ஆளுகை தொடர்பாக பதட்டமாக உள்ளது.

திங்களன்று, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வத்திக்கானுடனான உறவுகளை மேம்படுத்துவதில் நேர்மறையான அணுகுமுறையை எடுத்ததாகக் கூறியது. பெய்ஜிங் வத்திக்கானுடன் தொடர்புகளைப் பேணி வருகிறது என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் மங்கோலியாவில் போப்பின் கருத்துகள் குறித்து கேட்டபோது ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


மங்கோலிய தலைநகரில் மிகவும் தேவைப்படுபவர்களுக்கும், வீடற்றவர்கள், குடும்ப துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் சுகாதார சேவையை வழங்கும் கருணை இல்லத்தை திறக்கவுள்ளார்.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து வந்த கத்தோலிக்கர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய பக்தர்கள், "அன்பு இயேசு" என்ற வாசகத்துடன் சீருடை அணிந்து கருணை இல்லத்திற்கு வெளியே குவிந்தனர்.

No comments