திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு
கனடாவின் ஒட்டாவாவில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமண விழாவின் விருந்து நடந்த நேரத்தில், உள்ளே நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஒட்டாவா பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment