விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் தடா சந்திரசேகரன் காலமானார்


தமிழீடு விடுதலைப் புலிகளின் ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன்  உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் நேற்று திங்கட்கிழமை தமிழத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்

தடா சந்திரசேகரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் காலமானார் எனச் செய்திகள் வெளியாகின.

தடா சந்திரசேகரனின் மறைவு தமிழ்தேசிய ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளரான தடா சந்திரசேகர் இலங்கைக்கே சென்று ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டவர். தமிழ்நாட்டில் ஈழப்போர் குறித்தும், தமிழ் தேசிய விடுதலை குறித்தும் பேசி வந்தவர். தமிழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இவரை தமிழீழத்திற்கு அழைத்து நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து விடுதலை புலிகள் அமைப்புக்காக ஆஜராகி வழக்கறிஞராக வாதிட்டவர் தடா சந்திரசேகர். பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாளும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது சென்னை திருவான்மியூரில் உள்ள தடா.சந்திரசேகர் வீட்டில் தான் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது.No comments