வடக்கில் சரத்திற்கு எதிராக போராட்டம்!நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து வடமாகாணத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(25) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது 

அவர்களது அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டன.

யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் மன்னார்,கிளிநொச்சி மாவட்டங்களில் முல்லைதீவு சட்டத்தரணிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர்.


No comments